வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவான்மியூரில் உள்ள திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் 17 வயது இளம்பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைகள் அதிகமாக இருந்ததால் அந்த பெண் வீட்டிற்கே செல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இங்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணின் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
குறிப்பாக ஆபாசமாக பேசுவது, தாக்குவது, சூடு வைப்பது, பிறப்புறுப்பில் தாக்குவது , மார்பகங்களில் நகக்கீரல் இருப்பது, மிளகாய் பொடியை கரைத்து வாயில் ஊற்றியது, இரவு நேரங்களில் நிர்வாணமாக வெளியே ஓடிப்போ என்று மிரட்டியது என பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார் இந்த சிறுமி.
ஆளுங்கட்சி MLA வீட்டிலேயே இப்படியென்றால் இதுபோன்று பல MLA மற்றும் MP க்களின் வீட்டில் நடக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். இச்சம்பவம் 3 நாட்களாக சமூக வலைதளங்களிலும், செய்திதாள்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும் முதல்வர் மௌனம் சாதிக்கிறாரா அல்லது இந்தியாவில் இல்லையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகிரார்கள்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ கருணாநிதி மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
குழந்தை பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல் நடத்தியது, ஆபாசமாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

