Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 3, 2023
in அரசியல் செய்திகள்
0
எப்புட்றா.. சென்னை வில்லிவாக்கம் ஏரியா இது! சூப்பராகிடுச்சு,ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அசத்தல் அறிவிப்பு
206
SHARES
332
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி எதற்கும் பயன்படாதநிலையில் இருந்தது. இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. வேறலெவலில் மாறிய ஏரியை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சியில் பகுதியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை ஸ்மார்ட்சிட்டி நிதியிலிருந்து புனரமைப்பு பணிகள் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் – சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நீர்நிலையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு சொந்தமானது. ஆனால் குடிநீருக்கு பயன்படுவது இல்லை. இந்த ஏரியை முறையாக புனரமைத்தால் வில்லிவாக்கம் பகுதியில் ஒரு பிரதான நீர் நிலையாக மாறும் என்றும் இதன் மூலம் வில்லிவாக்கம் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக அன்று சென்னை மாநகராட்சி கூறியிருந்தது. இந்த ஏரிகொள்ளளவை 20 ஆயிரம் கனமீட்டரில் இருந்து 70 ஆயிரம் கனமீட்டராக அதிகரிக்கவும், ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடை பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், வேலி, திறந்தவெளி திரையரங்குகள் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்கழிப்பறை வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. அதன்படியே பல்வேறு பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை வில்லிவாக்கம் ஏரியில் நடந்து வந்தது.

வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் நடந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி தூர்வாரப்பட்டு நீர் நிறைந்து காணப்படுகிறத. ஏரியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சீரமைப்பு பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழு விவரத்தை சென்னை மாநகராட்சி இன்னமும் வெளியிடவில்லை. இந்நிலையில் வில்லிவாக்கம் ஏரியை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் நடந்தார்.

மேலும் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரைகள், பாதைகள், நீர் வழித்தடங்கள் போன்றவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், ” வில்லிவாக்கம் குளம் புணரமைப்பு பணிக்கு பின் அதன் கொள்ளளவு 300MLD ஆக உயர்ந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த வில்லிவாக்கம் ஏரி, இன்னும் அதிக நீரை சேமிக்கும் வகையில் மாற்றப்படும், மேலும் பொதுமக்கள் வந்து மகிழும் வகையில் ஏராளமான வசதிகள் அமைக்கப்படும்” என்று கூறியுள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த படங்கள் சென்னை மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

.

Previous Post

ஆள் கடத்தல் உள்பட பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவரா Dr. N John Camm ?

Next Post

ரவிக்கு ஆட்சிக்கலைப்பு திட்டமா? | சீறும் ஸ்டாலின், பாஜக-வுக்குள் வெடிகள்- Elangovan Explains | Elangovan explains the current hot debatable topic DMK Vs BJP

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரவிக்கு ஆட்சிக்கலைப்பு திட்டமா? | சீறும் ஸ்டாலின், பாஜக-வுக்குள் வெடிகள்- Elangovan Explains | Elangovan explains the current hot debatable topic DMK Vs BJP

ரவிக்கு ஆட்சிக்கலைப்பு திட்டமா? | சீறும் ஸ்டாலின், பாஜக-வுக்குள் வெடிகள்- Elangovan Explains | Elangovan explains the current hot debatable topic DMK Vs BJP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In