Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது துவங்குகிறது..? வெளியான தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2025
in அரசியல் செய்திகள்
0
மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது துவங்குகிறது..? வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தபோதே 1921ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தில், பனகல் ராஜா தலைமையிலான நீதிக் கட்சி அரசு, வகுப்புவாரிப் பிரதிநித்துவம் கொண்டுவந்தது. அது முதல் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1979ல் அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், 1980ஆம் ஆண்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், தொடர்ந்து அது கிடப்பில் போடப்பட்டு, 1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், நாடு முழுக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இது இடஒதுக்கீட்டில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

இந்திய விடுதலைக்கு முன்பு 1931ஆம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன்பின் 1941ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதற்கு இரண்டாம் உலகப் போர் உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், 1931ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பே தற்போதுவரையிலான இறுதி சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி தொடர்ந்து பல காலக்கட்டங்களில் பலரும் வலியுறுத்திவர 2011ஆம் ஆண்டு நடந்த 15ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மேற்கொண்டது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படுவதால், தனி நபரின் தனிப்பட்ட தகவல்களை அரசு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டது.

1931ஆம் ஆண்டு முறையான சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு 2025ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என 94 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் உள்ளது. இதனால், பல சமூகத்தினரும் சமூகம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின் தங்கியுள்ளனர். அவர்களுக்கான வளர்ச்சியை உறுதிபடுத்தவும், அவர்களுக்கான அரசு திட்டங்களை வடிவமைக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஓ.பி.சி. மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகள் போன்றவற்றில் சம வாய்ப்பை உறுதி செய்யவும் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத்தான் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கணக்கெடுப்பு எப்போதும் துவங்கும் எப்போது முடியும் என எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. இந்நிலையில், வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வரும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கணக்கெடுப்புப் பணி இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், அதன்படி, மக்கள் தொகையுடனான சாதிவாரி கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி துவங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பணி பிரதேசங்களான ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தக் கணக்கெடுப்பு துவங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

First Published :

June 04, 2025 6:09 PM IST



.

Previous Post

ஈமு கோழி மோசடி – சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம் Emu scam judgment for susi emu owner

Next Post

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In