சென்னை: பல்லுயிர்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடல் கோளத்தில் இருக்கும் பவளப்பாறைகள் அதன் நிறங்களை இழந்து வெளிரிப்போகத் தொடங்கியிருப்பது இயற்கை மனிதனுக்கு எழுப்பும் அபாய ஒலியாக அமைந்துள்ளது.
கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல, இயற்கையை மனிதன் எந்த அளவுக்கு அழித்தொழித்திருக்கிறான், இது எந்த அளவுக்கு எதிர்வினையாற்றக் காத்திருக்கிறது, அடுத்து நிலைமை எந்த அளவுக்கு மோசமாகும்? என்னவெல்லாம் நிகழும்? என்பது குறித்த நீடித்த ஆய்வுகளை கடலுக்கடியில் நடத்த மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், மன்னார் வளைகுடாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது பற்றி செய்தி வெளியிடப்பட்டது. அதாவத, “இயல்பு அளவுக்கு மேல்” மன்னார் வளைகுடாவின் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை (எஸ்எஸ்டி) காரணமாக பவளப் பாறைகள் வெளிரிப்போனத் தொடங்கி, அது விரைவில் மரணமடையலாம் என்று எச்சரித்திருந்தது. இதனால், வரும் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்திற்கு இடையில் பவளப்பாறைகள் வெளிரிப்போகத் தொடங்கும் என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக் கழகத்தால் கணிக்கப்பட்டிருந்தது.
கடந்த மார்ச் மாதம், தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக் கழகம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், மன்னார் வளைகுடாவிற்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அதாவது, “இயல்பு அளவுக்கு மேல்” மன்னார் வளைகுடாவின் கடல் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலை (எஸ்எஸ்டி) காரணமாக பவளப் பாறைகள் வெளிரிப்போகத் தொடங்கி, அது விரைவில் மரணமடையலாம் என்று எச்சரித்திருந்தது. குறிப்பாக வரும் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்திற்கு இடையில் பவளப்பாறைகள் வெளிரிப்போகத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிக்கப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்தே பவளப்பாறைகள் வெளிரத் தொடங்கியிருப்பது, நிலைமை இன்னும் மோசமடையலாம் என்பதையே காட்டுகிறது.
.
