ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று (ஜனவரி 19) 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படிக்கும் முன், “பரிசு பை’ ஒன்று வழங்கப்பட்டது.
அக்டோபர் 7, 2023ல் தொடங்கிய போர் இறுதியாக முடிவை எட்டியிருக்கிறது. முதற்கட்டமாக விடுவிக்கப்படும் 3 பணயக் கைதிகள் ரோமி கோனென், எமிலி தமரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்ப்ரெச்சர் ஆவர்.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளை வரவேற்கும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (Israel Defence Force) வெளியிட்டுள்ளனர்.
