1923 (ஆங்கிலம்) – Jio Cinema
டெய்லர் ஷெரிடன் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டு, ஹெலன் மிர்ரன், பிராண்டன் ஸ்க்லெனர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘1923’. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய விரிவாக்கம், தடை மற்றும் கடும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் (Duttons) பெரும் சவால்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வெற்றி காண்பதுதான் இந்த வெப்சீரிஸின் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் இந்தியாவில் ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் கடந்த மே 24ம் தேதி வெளியாகியுள்ளது.
FUBAR (ஆங்கிலம்) – Netflix
நிக் சாண்டோரா இயக்கத்தில் அர்னால்ட், மோனிகா பார்பரோ, மிலன் கார்ட்டர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘FUBAR’. தந்தை, மகள் இருவரும் பல ஆண்டுகளாக சிஐஏ ஆபரேட்டிவ்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இருவரும் தங்களின் பணி குறித்தான ரகசியத்தைச் வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். பின்னர், இருவரும் ஒருவரையொருவரை அறிந்து தங்களுக்கு வரும் ஆபத்துகளை சேர்ந்து எதிர்கொள்வதுதான் இந்த வெப்சீர்ஸின் கதை. அக்ஷன், திரில் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் கடந்த மே 25ம் தேதி வெளியாகியுள்ளது.

