Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரிடிஷ் இந்தியாவில் நடந்த முதல் சாதிவாரி கணக்கெடுப்பு… இடையில் தடைப்பட என்ன காரணங்கள்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரிடிஷ் இந்தியாவில் நடந்த முதல் சாதிவாரி கணக்கெடுப்பு… இடையில் தடைப்பட என்ன காரணங்கள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்த முக்கிய தகவல் இது.

ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?

பல தலைமுறைகளாக அனைத்திலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பல சமூகத்தினருக்கும், சம வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க அடிப்படை தேவையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்பதே பல அரசியல் கட்சிகளின் குரலாக இருந்துவருகிறது. காரணம், எந்தச் சமூகத்தினர் எந்த அளவில் இருக்கின்றனர், அவர்களுக்கான வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது, அவர்கள் இன்னும் எந்த அளவிற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என அனைத்தும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தெரியவரும்.

இந்தியாவின் முதல் மாகாணம்!

இந்தியா விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தபோதே 1921ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் மாகாணத்தில், பனகல் ராஜா தலைமையிலான நீதிக் கட்சி அரசு, வகுப்புவாரிப் பிரதிநித்துவம் கொண்டுவந்தது. அது முதல் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் அமலுக்கு வந்த இட ஒதுக்கீடு:

1979ல் அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், 1980ஆம் ஆண்டு அதன் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், தொடர்ந்து அது கிடப்பில் போடப்பட்டு, 1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங் மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், நாடு முழுக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இது இடஒதுக்கீட்டில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

இந்தியாவில் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு:

இந்திய விடுதலைக்கு முன்பு 1931ஆம் ஆண்டு முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன்பின் 1941ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதற்கு இரண்டாம் உலகப் போர் உட்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், 1931ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பே தற்போதுவரையிலான இறுதி சாதிவாரி கணக்கெடுப்பாக இருக்கிறது.

2011ல் எழுந்த சிக்கல்:

சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி தொடர்ந்து பல காலக்கட்டங்களில் பலரும் வலியுறுத்திவர 2011ஆம் ஆண்டு நடந்த 15ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மேற்கொண்டது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் மேற்கொள்ளப்படுவதால், தனி நபரின் தனிப்பட்ட தகவல்களை அரசு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டது.

94 ஆண்டுகளுக்கு பிறகு:

1931ஆம் ஆண்டு முறையான சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகு 2025ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என 94 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்துள்ளது.

First Published :

April 30, 2025 7:33 PM IST



.

Previous Post

Vijay : “என் வண்டி மேல ஏறி குதிக்காதீங்க!” – தொண்டர்களுக்கு விஜய் கட்டளை!

Next Post

நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains

நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In