கிட்டத்தட்ட 15 மாதங்கள் நடந்த இந்தப் போரில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்…ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
பெரும்பாலும், இஸ்ரேல் தான் பாலஸ்தீனம் மீது போரை தொடங்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இந்தப் போர் பாலஸ்தீனம் தொடங்கியதாக அமைந்தது. வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என கோரமான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இதில் ஏகப்பட்ட மக்கள் வீடு, வாசல், தொழிலை இழந்து வாடினர். பல
குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனர்.
பாலஸ்தீனத்தோடு முதலில் தொடங்கிய இஸ்ரேல் போர், நாட்கள் செல்ல செல்ல பாலஸ்தீனத்திற்கு உதவ வந்த லெபனான், ஈராக் என ஒவ்வொரு நாடுகளுடனும் தொடர்ந்தது…நீண்டது.

பாதிப்புகள்…
இந்தப் போரினால் குறிப்பிட்ட அந்த நாடுகள் மட்டுமல்லாமல், பிற உலக நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ரஷ்யா – உக்ரைன் போர் இன்னுமே முற்றுப்பெறாத சூழலில், “இந்த போர் தொடங்கியது…பல நாடுகளுடன் தொடர்ந்தது’ என இவை ‘மூன்றாம் உலக போர்’ ஏற்படுமோ என்ற அச்சம் வேறு பரவலாக இருந்தது.
இதன் விளைவாக, உலக நாடுகள் அனைத்தும் ‘இந்தப் போரை நிறுத்த வேண்டும்…முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’என்று ஒருமித்து குரல் எழுப்பி வந்தது.
