ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவிய குழு ஒன்று , காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை (genocide) நிகழ்த்துவதாக கூறி உள்ளது
இதில், காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இஸ்ரேல் அதிகார அமைப்புக்கு இருப்பாதாக அந்த குழு கூறி இருக்கிறது.
2021-ல் மனித உரிமைகள் கவுன்சில் அமைத்த, காசா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் இஸ்ரேல் குறித்த சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் (Independent International Commission of Inquiry) அறிக்கையில், காசாவில் இனப்படுகொலை நேரடியாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் அதிகார வர்க்கம் காசாவில் திட்டமிட்டு படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
“மரணத்திற்கு வழிவகுக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட முயற்சிக்கப்பட்டது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க ஹமாசின் செயல் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது” என்று கூறி உள்ளது.
சரி இனப்படுகொலை (genocide) என்றால் என்ன? எப்படி இனப்படுகொலை வரையறுக்கப்படுகிறது?
