Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் ஜப்பானிய புல்லட் ரயில் அறிமுகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டதா…? உண்மை என்ன…?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் ஜப்பானிய புல்லட் ரயில் அறிமுகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டதா…? உண்மை என்ன…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 15, 2025 4:01 PM IST

இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்கும் திட்டத்தை அரசு கைவிட்டதாகக் கூறி சில தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.

News18News18
News18

பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) மற்றும் தானே இடையேயான 21 கி.மீ. கடலுக்கடியில் சுரங்கப் பாதையின் முதல் செக்ஷனை திறப்பதன் மூலம், முதல் ஜப்பானிய புல்லட் ரயிலை இயக்கும் இலக்கில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்கும் திட்டத்தை அரசு கைவிட்டதாகக் கூறி சில தகவல்கள் சோஷியல் மீடியாக்கள் மூலம் பரவி வருகின்றன.

ஜப்பானின் ஷின்கான்சென் (Shinkansen) டெக்னாலஜியை பயன்படுத்தி, 508 கி.மீ. மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஜப்பானிய புல்லட் ரயிலை இயக்கும் முடிவை தற்போது வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக சில கட்டுரைகள் மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்கள் கூறுவது சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. உண்மையில் இந்த திட்டம் சுமார் ரூ.1.08 லட்சம் கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டுவரும் இவ்வளவு கோடி மதிப்புடைய புல்லட் ரயில் திட்டம் கைவிடப்பட்டது என்று வெளியாகி வரும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இது பொய்யான தகவல் என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுப்பு தெரிவித்துள்ளது. புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத எந்த ஒரு செய்தியும் தவறான தகவல்களே என்று கூறி, ரயில்வே அமைச்சகம் இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், திட்டமிட்ட புல்லட் ரயில் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

“இந்தியா-ஜப்பானுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் உணர்வில் இந்த திட்டத்திற்காக அடுத்த தலைமுறை E10 ஷின்கான்சென் ரயில்களை அறிமுகப்படுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. 508 கிலோமீட்டர் நீளமுள்ள முழு வழித்தடமும் ஜப்பானிய ஷின்கான்சென் டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. இது வேகம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் புதிய அளவுகோல்களை அமைக்கும்” என்று PIB குறிப்பிட்டுள்ளது.

Some articles and social media posts claim that the Ministry of Railways has decided to not run the Japanese bullet train on the Mumbai-Ahmedabad route.#PIBFactCheck


❌ This claim is misleading!

✅ @RailMinIndia has made NO such decision.

💠 Work on the Mumbai-Ahmedabad… pic.twitter.com/E5xSTyObsv

— PIB Fact Check (@PIBFactCheck) July 14, 2025

சமீபத்தில் புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக 310 கி.மீ. நீளமுள்ள வைடக்ட் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதன் மூலம் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. தண்டவாளங்களை அமைத்தல், மேல்நிலை மின் கம்பிகள், ரயில் நிலையங்கள் மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் திட்டமிட்டபடி துரிதமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அமைச்சகம் தனது சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடலுக்கடியில் அமைக்கப்பட உள்ள சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 21 கி.மீ. ஆகும். இதில் 5 கி.மீ. ஷில்பட்டா மற்றும் கன்சோலி இடையே New Austrian Tunnelling முறையை (NATM) பயன்படுத்தி கட்டப்பட்டு வருகிறது, மீதமுள்ளவை சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBMs) பயன்படுத்தி கட்டப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். அறிக்கையின்படி, தானே க்ரீக்கிற்கு அடியில் 7 கி.மீ. நீளமுள்ள கடலுக்கடியில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம்… திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடல்… ஏன் தெரியுமா…?

தற்போது வரை குறைந்தது 15 ஆற்றுப் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேலும் 4 கட்டுமானப் பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளன. தவிர 12 ரயில் நிலையங்களில் 5 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மேலும் 3 பாலங்கள் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளன. முக்கியமாக அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பாதுகாப்பான சுரங்கப்பாதை நடவடிக்கைகளை உறுதி செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் இடத்தில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கடும் வெப்ப அலை… காஷ்மீரில் அதிகரித்துள்ள AC விற்பனை…!

ஜப்பானிய ஷின்கான்சென் தற்போது E5 ரயில்களை இயக்கி வருகிறது. அடுத்த தலைமுறை ரயில்கள் E10 ஆகும். இந்த நிலையில் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் அடிப்படையில் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் E10 ஷின்கான்சென் ரயில்களை அறிமுகப்படுத்த ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 15, 2025 4:01 PM IST



.

Previous Post

நடிகை சரோஜா தேவி உடல் நல்லடக்கம்! saroja devi

Next Post

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை Ajith Kumar murder case

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை Ajith Kumar murder case

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை Ajith Kumar murder case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In