Last Updated:
பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர் விமானப்படை தள மற்றும் ராணுவ தலைமையிடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் பரவின
அணையை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் பொய்யான தகவல்களை பரப்பியுள்ளது. இதுகுறித்து உண்மை தகவல்கள் இந்தியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை கடந்த 7 ஆம் தேதி இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது. களத்தில் இந்தியாவை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், பொய்யான தகவல்களை பரப்பி சர்வதேச நாடுகள் மத்தியில் அனுதாபத்தை பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நோசரி அணையை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அரசு அமைப்புகளும், அந்நாட்டை சேர்ந்த ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பின. குறிப்பாக அந்நாட்டின் ராணுவ தலைமை அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அகமது சரிப், ஒரு நாட்டின் அணையின் மீது மற்றொரு நாடு தாக்குதல் நடத்துவதற்கு சர்வதேச சட்டங்கள் அனுமதி அளிக்கிறதா? என்று ஆக்ரோஷத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.
ஆனால் இது சம்பந்தமாக எந்தவொரு ஆதாரமும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானால் பரப்பப்பட்ட இந்த தகவல் பொய்யானது என்றும், இந்தியா மீது அவப்பெயரை ஏற்படுத்த பரப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர் விமானப்படை தள மற்றும் ராணுவ தலைமையிடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் பரவின. அவ்வாறு பரப்பப்பட்ட வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் நடந்த 2 குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் என்பது உறுதி செய்யப்பட்டது.
In a video shared by several pro-Pakistan handles, it is being falsely claimed that the Pakistan Airforce has targeted Srinagar airbase#PIBFactCheck
❌ The video shared is old and NOT from India.
✅The video is from sectarian clashes that took place in the year 2024, in… pic.twitter.com/vPmMq4IWdE
— PIB Fact Check (@PIBFactCheck) May 7, 2025
பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு ஊடகத்தினர் பரப்பும் ஏராளமான பொய்யான தகவல்களை மத்திய அரசின் PIB Fact Check சமூக வலைதள பக்கங்கள் உண்மைகளை உறுதி படுத்தி தகவல்களை வெளியிடுகின்றன.
இதன் மூலம் பாகிஸ்தான் பரப்பும் அவதூறுகளை இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் அறிந்து கொள்கின்றன.

