Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜக-வில் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளருக்குக் கைது வாரன்ட்; பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2024
in அரசியல் செய்திகள்
0
வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜக-வில் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளருக்குக் கைது வாரன்ட்; பின்னணி என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தின் சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, மற்ற வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெறவே, பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒருவாரத்தில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம், திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

அக்‌ஷய் காந்தி பாம் – இந்தூர்

இந்த நிலையில், 17 வருட கொலை முயற்சி வழக்கில் அக்‌ஷய் காந்தி பாம் மற்றும் அவரின் தந்தை காந்தி லாலைக் கைதுசெய்ய அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னதாக, கடந்த 2007-ல் நிலத் தகராறில் யூனுஸ் படேல் என்ற நபரைத் தாக்கியதாக அக்‌ஷய் காந்தி பாம் மற்றும் அவரின் தந்தைமீது ஐ.பி.சி பிரிவுகள் 294 (தவறான பேச்சு), 323 (தாக்குதல்), 506 (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியிருக்க, கடந்த ஏப்ரல் 24-ம் தேதியன்று இந்தூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், இந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் ஐ.பி.சி-யின் பிரிவு 307 (கொலை முயற்சி) பிரிவையும் சேர்க்குமாறு உத்தரவிட்டார். அதோடு, மே 10-ம் தேதி இருவரும் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மே 3-ம் தேதி அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கவும் அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அக்‌ஷய் காந்தி பாம் – இந்தூர்

இப்படியிருக்க நீதிமன்ற உத்தரவின்படி நேரில் ஆஜராகவேண்டிய நாளான நேற்று, அக்‌ஷய் காந்தி பாம் வெளியூரிலிருப்பதாலும், அவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர் ஓய்வெடுக்கக் கூறியிருப்பதாலும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவர்களின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். இதனை நிராகரித்த அமர்வு நீதிமன்றம், இருவருக்கு எதிராகவும் கைது வாரன்ட் பிறப்பித்து ஜூலை 8-ம் தேதிக்குள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Prajwal: விசா இல்லாமல் பிரஜ்வல் வெளிநாடு தப்பியது எப்படி… ராஜாங்க பாஸ்போர்ட் என்றால் என்ன?!



.

Previous Post

மக்களவை தேர்தல் – தெலுங்கானாவில் வெற்றி பெற போவது யார்? – News18 தமிழ்

Next Post

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In