Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? – தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK: தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? – தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான காளியம்மாள், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. காளியம்மாள் த.வெ.க-வில் இணைவாரா.. நா.த.க-விலேயே தொடர்வாரா என்பது குறித்து விரிவாக விசாரித்தோம்.

சீமான் - காளியம்மாள்
சீமான் – காளியம்மாள்

வி.சி.க-விலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவும், அ.தி.மு.க-வில் இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இன்று (ஜனவரி 31) இணைந்தனர். இன்றைய தினமே நாம் தமிழர் காளியம்மாளும் இணைகிறார் எனத் தகவல் வெளியாக, அனல் பறந்தது தமிழ்நாடு அரசியல் களம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “ஆடியோ லீக் விவகாரத்தில் நாம் தமிழர் தலைமை மீது அதிருப்தியில் ஏற்பட்டதால் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கிறார் காளியம்மாள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளை மாநில நிர்வாகிகள் சிலர் மேற்கொண்டதால் சீமானுக்கும் காளியம்மாள்மீது கசப்பு ஏற்பட்டது. அதனால் முன்புபோல் நா.த.க-வில் அவரால் செயல்பட முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள், “காளியம்மாள், நா.த.க-வின் மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்த மாற்றுக் கட்சியினர், `எங்க கட்சிக்கு வந்துருங்க.. உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு’ எனப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. அந்த வரிசையில் த.வெ.க-வும் காளியம்மாளைக் கட்சியில் இணைக்க சில சந்திப்புகளை ஏற்பாடு செய்தன. ஆனால் காளியம்மாள் தரப்பிலிருந்து எந்த கமிட்மென்ட்டும் இதுவரை தரப்படவில்லை. அதேசமயம் பின்வரும் காலங்களில் நா.த.க-வை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சிகளில் அவர் இணைந்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை” என்றனர்.

சீமான், விஜய்

அரசியல் நோக்கர்கள் சிலரோ, “பெரியார் எதிர்ப்பு பிரசாரத்தைச் சீமான் கையிலெடுத்திருப்பதால் டென்ஷனான ஆளும்தரப்பு நா.த.க-வைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரம் காட்டுகிறது. அந்த வகையில் சீமான்மீதான அதிருப்தியில் நிர்வாகிகள் ஓட்டம் பிடிக்கிறார்கள் எனப் பிம்பத்தை உருவாக்கிவரும் சூழலில்..`காளியம்மாளும் கிளம்புகிறார்` என்று பற்ற வைத்திருக்கிறது உளவுத்துறை” என்றனர்.

காளியம்மாள்
காளியம்மாள்

நாகைப்பட்டினம் நா.த.க வட்டாரத்தில் விசாரித்தோம். “பிப்ரவரி முதல் வாரத்தில் காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் வதந்தியே. கட்சியிலிருந்து விலகுவது குறித்தும் மாற்றுக் கட்சிகளில் இணைவது குறித்தும் இதுவரை எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை” என்றார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் வெளியேறுகிறாரா..? சர்ச்சையும் விளக்கமும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!

Next Post

மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்

மூன்று பேர் தலைமறைவு.. இளைஞர்கள் துரத்திய காரில் திமுக கொடி வந்தது எப்படி? போலீசார் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In