தமிழ்நாட்டில் காவல்துறை உள்ளதா?
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட காவல்துறை செயலற்று கிடைக்கிறது. குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் என்று சொல்லி அரசாங்கம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. தமிழகத்தின் காவல் துறை என்ற ஒன்று உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. திருநெல்வேலியில் ஜாகீர் உசேனை கொலை செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு எதிரிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்த நிலையில், திருநெல்வேலி ஆணையாளர், காவல்துறை ஆய்வாளர்களுக்கும் இந்த நபர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் மனு அளித்து உள்ளார். ஆனால் சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து உள்ளது. ஜாகீர் உசேன் வெளியிட்ட வீடியோவில் உயிருக்கு ஆபத்து என்று கூறி உள்ளார்.
