இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:
“அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றுதான் அனைவரும் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரம் கூட்டணியாகவா அல்லது தனியாகவா என்பது தனிப்பட்ட விஷயம். அதற்கான சூழல் வரும்போது அந்தந்த கட்சிகள் வரும். இப்போது தி.மு.க கூட்டணியில் இருப்பதால், எங்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கேட்பதற்கான நேரம் இதுவல்ல. தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் அதைப் பற்றி பேசலாம்.

மக்கள் பிரச்னைகளுக்குப் போராட ஆட்சியில் இருக்கவேண்டும் என்றில்லை. மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம் எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. தொடர்ந்து நாங்கள் போராடுவோம். பிரச்னைகள் தொடர்பாக அரசை வலியுறுத்துவோம். இயக்கங்கள் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம்” என்றார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கும் சூழலில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள் முடிவுசெய்யும்.
அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று விசிக பேசியிருப்பது பற்றி உங்களின் கருத்து என்னவென்பதை கமென்ட்டில் பதிவுசெய்யவும்!
