Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in அரசியல் செய்திகள்
0
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது? | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 22, 2025 5:33 PM IST

மண்ட்சவுர் பகுதியில் கர்பா நடன பயிற்சியில் இருந்த இளம்பெண்ணை, கணவர் குடும்பத்தினர் பொம்மை துப்பாக்கியுடன் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Rapid Read
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளம்பெண்.

நவராத்திரி விழாவை ஒட்டி ‘கர்பா’ நடனத்திற்காக இளம்பெண்கள் பலர் ஒன்று கூடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, அத்துமீறி நுழைந்த கும்பல் அவர்களை தலைதெறிக்க ஓடவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு ழுமுவதும் நவராத்திரி விழா களைகட்டியுள்ளது. இதையொட்டி, வட மாநிலங்களில் பெண்கள் ஒன்று கூடி குஜராத்தை பாரம்பரியமாக கொண்ட கர்பா நடனம் ஆடுவது வழக்கம். இதற்காக, மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் பகுதியில் உள்ள ஓர் அரங்கத்தில் பெண்கள் பலரும் வட்டமிட்டு கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயிற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு கும்பல் திபுதிபுவென உள்ளே புகுந்தது.

அதில், இருவர் அங்கிருந்த இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் அடாவடி கும்பலை தடுத்து நிறுத்த முன்வந்தனர். அப்போது, கும்பலில் இருந்த ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டியதும், அனைவரும் தலைதெறிக்க ஓடி ஒளிந்தனர். ஆனால், அந்த நபரின் கையில் இருந்தது தீபாவளிக்கு வாங்கிய பொம்மை துப்பாக்கி என்பது தெரிந்ததும், அப்பாவி பெண்ணை காப்பாற்ற ஓடி வந்தனர்.

இருந்த போதும், 7 பேர் கொண்ட கும்பல், இளம்பெண்னை தரதரவென இழுத்துச் சென்றது. தொடர்ந்து, சாலையிலும் இழுத்துச் சென்றவர்கள், தயாராக நிறுத்தி வைத்திருந்த காரில் கடத்திக் கொண்டு விரைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், சோதனை சாவடிகளுக்கு அலெர்ட் மெசேஜ் பறந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார், 2 மணி நேரத்திற்குள் இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டதுடன், கடத்தல் கும்பலையும் கூண்டோடு பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் கடத்தப்பட்ட இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.  திருமணமான சில நாட்களிலேயே கணவன் குடித்துவிட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்கதையானதால் வேறு வழியில்லாம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சூழலில் தான் தனியாக வசித்து வந்தவரை, கணவர் குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கணவர் குடும்பத்தினர் 7 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை பிரிந்து சென்ற இளம்பெண்ணை, பொம்மை துப்பாக்கியை காட்டி குடும்பத்தினரே கடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 22, 2025 5:33 PM IST



.

Previous Post

`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்’ – சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு! | Annamalai slams stalin and pinarayi vijayan in ketala

Next Post

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In