தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்!” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “இது ஒரு ஜனநாயக நாடு. எனது இடத்தை விட்டு வெளியேறவும், எங்கும் செல்லவும் எனக்கு உரிமை உண்டு.

நான் போராட்டக்களத்துக்குத்தான் செல்கிறேன் என்பது காவல்துறைக்கு எப்படித் தெரியும்? நான் ஒரு சமூக நோக்கத்திற்காக என் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவர்கள் என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்? தமிழக அரசு என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை… இது சரியல்ல. எந்த அடிப்படையில் என்னை அவர்களால் தடுக்க முடியும்? காவல்துறை எப்படி என் வீட்டைச் சுற்றி வளைக்க முடியும்? நான் செல்வேன்…” என்றார்.
