Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்பு கேட்டாரா அன்னபூர்ணா உரிமையாளர் – நடந்தது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in அரசியல் செய்திகள்
0
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்பு கேட்டாரா அன்னபூர்ணா உரிமையாளர் – நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அன்னபூர்ணா சீனிவாசன்

” இனிப்புக்கும், காரத்துக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி உள்ளது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் கலந்தால் 18 சதவிகிதம் ஜிஎஸ் டி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன்

ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. “ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் உள்ளனர்.

கோவை ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு

அப்போது சீனிவாசன், ” நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்று எழுந்து நின்று கை கூப்புவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த வீடியோவில் ஆடியோ சரியாக கேட்கவில்லை. இதுகுறித்து பாஜக தரப்பிலோ அல்லது அன்னபூர்ணா உணவகம் தரப்பிலோ அதிகாரபூர்வாக எந்த அறிவிப்பும்  கொடுக்கவில்லை. அதனால் இதன் முழு விபரம் தெரியவில்லை.

அன்னபூர்ணா

இதுகுறித்து உண்மைநிலை அறிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் கருத்துகளை அறிய முயற்சி செய்தோம். இருப்பினும் பதில் கிடைக்கவில்லை. அவர்கள் தரப்பிலிருந்து பதில் வரும் பட்சத்தில் அதையும் வெளியிடுகிறோம்.



.

Previous Post

Vinesh Phogat: மூன்று கார்கள்; ரூ.12 லட்சம் கடன்; மனுத்தாக்கல் செய்த வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு | Vinesh Phogat owns three cars and repaying a loan has Rs 1,95,000 cash in hand

Next Post

Sitaram Yechury: 'மந்திரி பதவியை விட மக்கள் பணிதான் பெரிது' – சீதாராம் யெச்சூரியும் செங்கொடியும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sitaram Yechury: 'மந்திரி பதவியை விட மக்கள் பணிதான் பெரிது' – சீதாராம் யெச்சூரியும் செங்கொடியும்!

Sitaram Yechury: 'மந்திரி பதவியை விட மக்கள் பணிதான் பெரிது' - சீதாராம் யெச்சூரியும் செங்கொடியும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In