Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜம்மு – காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜம்மு – காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதிகளா? இஸ்ரேலின் தவறால் என்ன நடந்தது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜம்மு – காஷ்மீர் இல்லாத, இந்தியாவின் தவறான வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் காட்சிப்படுத்தியதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகின்றது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் அதன் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணைகள் குறித்த வரைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Iran is a global threat.

Israel is not the end goal, it’s only the beginning. We had no other choice but to act. pic.twitter.com/PDEaaixA3c

— Israel Defense Forces (@IDF) June 13, 2025

இஸ்ரேலின் இந்தப் பதிவுக்கு, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து வந்த சூழலில், அந்நாட்டு ராணுவம் அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

“இந்தப் பதிவு, பகுதிகளைக் குறித்த படமாகும். இதில், எல்லைகளைத் துல்லியமாகக் காட்ட தவறிவிட்டது. இதற்கு, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பதிவில் இதுவரை இந்திய வரைப்படமானது மாற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேலின் விமானப் படையும், இதேபோன்ற ஒரு வரைப்படத்தை பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த வரைப்படத்தை நீக்க அல்லது சரி செய்யவேண்டுமென தான் வலியுறுத்தியுள்ளதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவன் அஸார் தெரிவித்துள்ளார்.





.

Previous Post

’கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?’அன்புமணி ராமதாஸ் கேள்வி

Next Post

Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்”- ஈரான்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்”- ஈரான்

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In