இந்த விஷயத்தில் தலையிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “அந்தக் குழந்தையின் கல்வி தடைபடாது என்ற உறுதிப்பாட்டை நான் வழங்குகிறேன். இதுதான் பாஜகவின் “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ என்ற போலி முழக்கங்களின் உண்மை. குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டாம் என்று பாஜகவை நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனப் பேசியுள்ளார்.
ராஜிவ் திரிப்பாதி கோவிட் காலத்தில் விபத்து ஏற்பட்டு கால்களில் பாதிப்பு ஏற்பட்டதால் வேலையை இழந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் ஆங்கில வழிப் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது கல்வியை எப்படியோ சமாளித்து வருகிறார்.

இளைமகள் பன்குரி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார். “அவளது கல்வியை நிறுத்துவது குறித்து யோசித்து வருகிறேன். அந்த நேரத்தில்தான் முதலமைச்சரிடம் உதவி கேட்கலாமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதற்காக ஜூலை 1-ம் தேதி அவரை சந்தித்தோம்” எனக் கூறியுள்ளார் ராஜிவ்.
அகிலேஷ் யாதவின் உதவியை ஏற்க மறுக்கும் வகையில், “அவர் (அகிலேஷ்) ட்வீட் செய்துள்ளார். ஆனால் நாங்கள் மடத்துடனும் மகாராஜ் ஜியுடனும் (யோகி ஆதித்யநாத்) தொடர்புடையவர்கள், மேலும் அவர் என் மகளின் கல்வியை உறுதி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மாநில கல்வித்துறை சார்பில் குறிப்பிட்ட பள்ளிக்கு கடிதம் எழுதப்பட்டதாக என்.டி.டி.வி செய்தி தளத்திடம் ஒரு கல்வி அதிகாரி கூறியிருக்கிறார். எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. கல்வி நிறுவனமும் இதுகுறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
