காவல்துறை விளக்கம்
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. அதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் 54/25 த.பெ ஜெயரமான், காந்தி நகர், மணப்பாறை என்பவர் மேற்படி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி 9/25 என்பவரிடம், அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகார் அளித்தார்.
