தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, கடும் அபராதம் விதிக்கப்படுவது போன்றவற்றில் இருந்து தமிழர்களை பாதுகாக்கவும், விரைவில் இலங்கை செல்லும் பிரதமர், தமிழ்நாடு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணவும், கச்சத்தீவை மீட்பதற்காக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றம் விரும்புகிறது” எனப் பேசினார்.
வானதி சீனிவாசன் ஆதரவு
தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் பிறகு அதுகுறித்து உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். “மீனவர்கள் நலனை மத்திய அரசு பிரித்துப்பார்க்கவில்லை. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட நாள் முதல் அது தவறென்று பாஜக கூறிவருகிறது. வரலாற்று தவறை பிரதமர் மோடியால் மட்டுமே சரி செய்ய முடியும்” என்று பேசியுள்ளார்.

எடப்பாடி கேள்வி; ஸ்டாலின் பதில் கேள்வி!
இந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தருவதாக அறிவித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. “இது உணர்வுப்பூர்வமான பிரச்னை; நம் உரிமையை மீட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில், “திமுக இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்.பிக்கை 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்துள்ளது? வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்களே அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் கேள்விகளையும் எழுப்பினார் எதிர்கட்சி தலைவர்.
அதற்கு, “நான் பலமுறை பிரதமரை சந்தித்தபோது வலியுறுத்தியுள்ளேன். 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்களும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது கூட டெல்லி சென்று வந்தீங்க, வலியுறுத்தப்பட்டதா?” என பதில் கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இறுதியில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.!
ஆளும் தரப்பு கேள்விக்கு பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் சார்பில் அதிமுக மீண்டும் வாய்ப்பு கேட்டது. எனினும் அது மறுக்கப்பட்டதாக வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
