இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய முக்கிய குற்றச்சாட்டுகள் இங்கே…
* அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை.
* பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
* புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஒரே நொடியில் கட்சியை உடைத்தது யார்?
* தான் செய்த செயலை மறைத்து, கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார்.
* 35 வயதிலேயே அன்புமணியை எம்.பி ஆக்கியதுதான் நான் செய்த பெரிய தவறு.
* தாயை பாட்டிலால் அடிக்க முயன்றவர். குருவை அவமதித்தவர்.
* மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணியே ஃபோன் செய்து, “கூட்டத்துக்கு சென்றால், உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடுவார்’ என சொல்லியிருக்கிறார் அதனால் 108 பேரில், 8 பேர்தான் கூட்டத்துக்கு வந்தார்கள்; அன்றே நான் செத்துவிட்டேன்; கற்பனை கூட செய்ய முடியாத இப்படியான பொய்களை, கூசாமல் சொல்வார் அன்புமணி.
