பாராளுமன்றத்தில் வண்ண புகையை வீசியதற்கு பதிலாக வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 14 எம்பிக்களை ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். ஜனநாயக படுகொலை செய்வதிலேயே பாஜகவினர் கவனமாக இருக்கிறார்கள். -வைகோ பேட்டி
மதிமுக மதுரை மாவட்ட துணை செயலாளர் அன்ன முகமது இல்ல விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு அன்னமுகமதின் மகன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில்:
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக தான் முக்கிய பங்கு வகிக்க போகிறது. திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்ற தளபதி ஸ்டாலின், பெரிய கண்டம் வருவதைப் போல புயல் மழை தாக்கப் போகிறது என்று சொன்னபோது அதை திட்டமிட்டு பணியாற்றியதால் சென்னை தப்பித்தது. இந்த ஆபத்திலிருந்து தமிழகத்தை காத்துக் கொடுத்தவர் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின். பாராளுமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர விடுதியைப் போல உள்ள அந்தப் பாராளுமன்ற கட்டிடம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் இன்னும் கம்பீரமாக இருக்கிறது. இதை எதிரே பணத்தை கொட்டி கட்டி இருக்கிறார்கள், அங்கு நாலு தடுப்புகள் உள்ளது, ஆனால் நாலு தடுப்புகளையும் தாண்டி பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து மேலிருந்து கீழே குதித்து வண்ண புகை குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகையை வீசியதற்கு பதிலாக வெடிகுண்டு வீசி இருந்தால் எவ்வளவு பெரிய விபரீதம் ஆகியிருக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இல்லை, இதை கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரை கூட்டம் முழுவதும் பங்கேற்க விடாமல் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். அதே போல மக்களவையிலும் 14 எம்பிக்களை நீக்கி வைத்திருக்கிறார் ஓம் பிர்லா. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இந்த விபரீதம் நடந்துள்ளது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியதால் ஓம் பிர்லா வெளியேற்றி விட்டார். ஜனநாயக படுகொலை செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் பாஜகவினர்.

மதுரையில் மதிமுக சார்பாக பிரம்மாண்டமான மாநாடு, கட்டுப்பாடு, கட்டு கொலையாமல் கண்ணியம் கடமை பின்பற்றுகின்ற மாநாடாக அமைந்தது. இப்பொழுது தேர்தல் நிதி பிரிப்பதற்கு தேதி குறித்து மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிதியை எப்போது கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். வெள்ள நிவாரண பணிகளையும் மாவட்ட செயலாளர்கள், கட்சித் தோழர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதானிக்கும், அம்பானிக்கும் தான் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. சாதாரண மக்களுக்கு நடைபெறவில்லை, சட்டமன்றத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி பெற்றோம், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். அதுவும் திராவிட பூமி ஆகிய தென்னகத்தில் அதிக இடங்களை பெறுவோம். இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்திய அரசிடம் கேட்ட நிதி குறைவாக வந்துள்ளது குறித்த கேள்விக்கு:
கேட்டதில் ஐந்தில் ஒரு பங்கு நிதி தான் கொடுத்திருக்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பான பணியை திமுக தோழர்கள் செய்திருக்கிறார்கள். கொடுக்க வேண்டிய தொகை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும். அவர்கள் ஒரு கண்ணிலே சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என்பது போல பாஜக ஆளுகிற மாநிலத்தில் ஒரு நிதியும், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் குறைவான தொகையும் கொடுத்துள்ளார்கள். இது அநீதி, அக்கிரமம் என்றார்.


ஆளாளுக்கு பேசிக்கொண்டே இருந்தால் எப்படி பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா எடுக்கப்படவில்லை எனில் உடனடியாக பணியில் கவனக்குறைவாக இருந்த அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்