India oi-Mathivanan Maran
Updated: Sunday, June 25, 2023, 11:23 [IST]
பங்குரா: மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இவ்விபத்தில் ஒரு ஓட்டுநருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே ஒண்டா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனையடுத்து ரயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒரு சரக்கு ரயில் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவ்விபத்தால் காரக்பூர்- பங்குரா- ஆத்ரா மார்க்கத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. #WATCH | West Bengal: Two goods trains collided at Onda railway station in Bankura. Rail operation on Kharagpur–Bankura–Adra line has been halted. More details awaited. pic.twitter.com/T4sL5rn7Rp
— ANI (@ANI) June 25, 2023 14 trains cancelled, 3 diverted and 2 short terminated due to the derailment of goods train at Ondagram station of Adra Division today: South Eastern Railway https://t.co/cXKOVGuUum pic.twitter.com/qyjkDLdOb1
— ANI (@ANI) June 25, 2023 இந்த விபத்தைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 3 ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விபத்துக்கு என்ன காரணம்?: சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதால் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட மற்றொரு சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் சென்று விபத்து நிகழ்ந்துள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
In West Bengal, Two goods trains collided at Onda railway station in Bankura. Rail operation on Kharagpur–Bankura–Adra line has been halted.

