முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடைப்பெற்றது.
நம் கழகம் எப்போதும் துடிப்புடன் இயங்க காரணமாக இருக்கும் கழக நிர்வாகிகள் மற்றும் குழந்தையை சீராட்டும் அன்னை போல நாள்தோறும் சென்னையை பராமரிக்கும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் என 2,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் அன்பும் – வாழ்த்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.





