Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சத்தமிட்டு சொன்னோம், இனி ரத்தமிட்டும் சொல்லுவோம் – தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சத்தமிட்டு சொன்னோம், இனி ரத்தமிட்டும் சொல்லுவோம் – தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்..!
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் தீவிரம்

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனாலும், முதல்வர் பதிலளிக்கவேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நேற்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டது.

ஆனால் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறினர்.

இது குறித்து டெட் ஆசிரியர் சங்கத்தினர், “ஏற்கனவே பல முறை போராடியபோதும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது, ஆனால் செய்யவில்லை. முதல்வர் உறுதி அளித்தால் தான் நாங்கள் இப்போது திரும்பிச் செல்வோம்.

இல்லையென்றால் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இதுவரை சத்தமிட்டுச் சொன்னோம், இனியும் கேட்கவில்லையென்றால் ரத்தமிட்டுச் சொல்வோம். எங்கள் வேதனை எங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்” என்று கூறியுள்ளனர்.

Previous Post

NDA கூட்டணியில் சேரும் அளவுக்கு பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஒன்றும் பைத்தியகார கட்சி அல்ல..! – K.T.ராமராவ் காட்டம்.

Next Post

மகாராஷ்டிராவில் இறந்தது 100 பேர், அரசு அறிக்கையில் 35 பேர் | ஏன் எண்ணிக்கையை குறைக்கிறது அரசு..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிராவில் இறந்தது 100 பேர், அரசு அறிக்கையில் 35 பேர் | ஏன் எண்ணிக்கையை குறைக்கிறது அரசு..?

மகாராஷ்டிராவில் இறந்தது 100 பேர், அரசு அறிக்கையில் 35 பேர் | ஏன் எண்ணிக்கையை குறைக்கிறது அரசு..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In