சமீபத்தில் பாஜக எம்.பி அனுராக் தாகூர், தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாசல பிரதேசத்தில் உள்ள பி.எம் ஶ்ரீ பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் உரையாடும் போது, “விண்வெளிக்கு முதன் முதலில் சென்றது அனுமன் ஜி தான் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இதையடுத்து புராணத்திற்கும், அறிவியலுக்கும் வித்தியாசமிருக்கிறது, மாணவர்களிடம் தவறாக தகவல்களை, இந்துத்துவத்தைப் பரப்பக் கூடாது என்று கண்டனங்கள் எழுந்தன.
இந்த சர்ச்சை முடிவதற்குள் தற்போது பாஜக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று நம்மிடம் உள்ள ட்ரோன்கள், ஏவுகணைகளை பண்டைய காலத்திலயே வைத்திருந்தோம். இதை நாம் மகாபாரதத்தில் படித்திருக்கிறோம்” என்று போபாலில் உள்ள இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER), பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
