Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்” – திட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் EPS விமர்சனம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2024
in Default
0
“நாங்கள் நலமாக இல்லை ஸ்டாலின்” – திட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் EPS விமர்சனம்..!
70
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ என்கிற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், “தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக இந்த “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.” என்று திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திட்டத்தின் தொடக்க நாளான இன்று ‘நீங்கள் நலமா’ திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நலமாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” ‘நீங்கள் நலமா’ என்று கேட்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!. விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு!. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!. நாங்க நலமா இல்லை ஸ்டாலின்” என்று பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

"நீங்கள் நலமா" என்று கேட்கும்
திரு. @mkstalin அவர்களே-

நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு!
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!

சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு!
விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு!

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு… pic.twitter.com/nTKZWGTtrz

— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 6, 2024
Previous Post

சுற்றுலா செல்லும் இந்தியர்களை வலுக்கட்டாயமாக கடத்தி உக்ரைன் போர்களத்திற்கு அனுப்பும் ரஷ்யா : அமைதி காக்கும் இந்திய அரசு…!

Next Post

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட்டால் பாஜக ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்று தெரிந்துவிடும் – செல்வப்பெருந்தகை …

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட்டால் பாஜக ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்று தெரிந்துவிடும் – செல்வப்பெருந்தகை …

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட்டால் பாஜக ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என்று தெரிந்துவிடும் - செல்வப்பெருந்தகை ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In