Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘நாங்கள் எதிரிகள் அல்ல’ – மகனுடன் சென்று பட்னாவிஸை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே / Uddhav Thackeray meets Chief Minister Devendra Fadnavis with his son

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2024
in அரசியல் செய்திகள்
0
‘நாங்கள் எதிரிகள் அல்ல’ – மகனுடன் சென்று பட்னாவிஸை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே / Uddhav Thackeray meets Chief Minister Devendra Fadnavis with his son
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ.க தலைமையில் புதிய கூட்டணி அரசு பதவியேற்று இருக்கிறது. புதிய அரசு பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் உத்தவ் தாக்கரே அதில் கலந்து கொள்ளவில்லை. மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்ட நிலையில் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் திங்கள் கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக உத்தவ் தாக்கரே நாக்பூர் வந்திருந்தார். அவர் சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது.

மரியாதை நிமித்தமாக இச்சந்திப்பு நடந்தது. இதில் உத்தவ் தாக்கரேயுடன் அவரது மகன் ஆதித்ய தாக்கரே, அனில் பரப், வருண் சர்தேசாய் போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, “அரசு மகாராஷ்டிரா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கவேண்டும்”‘என்றார்.

சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்ற வெற்றி குறித்து கேள்வி எழுப்பியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,” நாங்கள் மக்கள் மனதில் இருக்கும் சந்தேகத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருப்போம்”என்றார்.

இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதித்ய தாக்கரே, “எங்களுக்குள் அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் எதிரிகள் கிடையாது”என்றார். உத்தவ் தாக்கரே தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேவேந்திர பட்னாவிஸ் தான் சிவசேனாவை இரண்டாக உடைத்ததாக உத்தவ் தாக்கரே கருதுகிறார். அப்படிப்பட்ட நிலையிலும் இச்சந்திப்பு நடந்திருக்கிறது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 288 தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தங்களது கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.



.

Previous Post

’2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் அதிமுக! கழற்றி விடப்படும் ஈபிஎஸ்?’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

Next Post

ஆப்கன் – ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆப்கன் – ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!

ஆப்கன் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In