Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Wayanad : `வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் இல்லை' – மத்திய அரசு சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Wayanad : `வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் இல்லை' – மத்திய அரசு சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஜூலை 30 – ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியது. புஞ்சிரி மட்டம், முண்டகை, சூரல் மலை கிராமங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 400 – க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். உறவுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மோடி | வயநாடு நிலச்சரிவு

நிலச்சரிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும் ஆராத ரணமாக இருக்கிறது. நூற்றாண்டு கண்டிராத இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என கேரள அரசு, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆலோசனை கூட்டமும் நடத்தினார். இது குறித்து விரிவான கடிதம் ஒன்றையும் மத்திய அரசுக்கு வழங்கியது. தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்து வந்த நிலையில், தற்போது பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள அரசின் டில்லி பிரதிநிதி தாமஸிற்கு மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், ” நாட்டில் ஏற்படும் எந்தவொரு பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க மாநில மற்றும் தேசிய பேரிடர் விதிமுறைகளில் வழிவகையில்லை. மாநில பேரிடர் நிதியின் மூலம் கேரள மாநிலத்திற்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி | வயநாடு நிலச்சரிவு

இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடியை இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. மேலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ. 394 கோடி ரூபாய் இருப்பு இருக்கிறது. நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள மாநிலத்திடம் போதுமான நிதி கையிருப்பில் இருக்கிறது. அதேவேளையில், கேரள மாநிலத்திற்கு சாத்தியமான உதவிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை’- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்



.

Previous Post

ராஜாகிளி ரிலீஸ் தேதி!

Next Post

Top 10 News: குஜராத் கடற்பரப்பில் போதைப்பொருள் பறிமுதல், 45 நிமிடங்கள் ராகுல் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News: குஜராத் கடற்பரப்பில் போதைப்பொருள் பறிமுதல், 45 நிமிடங்கள் ராகுல் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார்

Top 10 News: குஜராத் கடற்பரப்பில் போதைப்பொருள் பறிமுதல், 45 நிமிடங்கள் ராகுல் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In