Last Updated:
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முறைப்படுத்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு, பாஜக கூட்டணி எம்பிக்கள் தெரிவித்த 14 திருத்தங்கள் ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சியினரின் 44 திருத்தங்கள் நிராகரித்தது.
இறுதியாக, 655 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், அதற்குக் குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவும், 11 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். பின்னர், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
Delhi,Delhi,Delhi
February 03, 2025 8:49 AM IST

