Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Waqf Amendment Bill: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 5, 2025
in அரசியல் செய்திகள்
0
Waqf Amendment Bill: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா காரசார விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது. வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக சாடினார். தொடர்ந்து பேசிய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

12 மணி நேர காரசார விவாதம்

வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, வக்ஃபு வாரிய மசோதாவை வைத்து இஸ்லாமியர்களை அடக்குவதன் மூலம் மத்திய அரசு மோதலுக்கு வழிவகுப்பதாக  குற்றஞ்சாட்டினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் மல்லிகார்ஜூன கேட்டுக் கொண்டார்.

திமுக எம்.பி திருச்சி சிவா பேசும்போது, “வக்ஃபு நிர்வாகத்தை கைப்பற்றுவதற்குதான் வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக” குற்றஞ்சாட்டினார். இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “இஸ்லாமியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசும்போது, இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வக்ஃபு வாரிய சட்டத்தை சீரமைத்த நிலையில், இந்தியா அதனை சீரமைக்கக் கூடாதா என்று  கேள்வியெழுப்பினார். தற்போதைய வக்ஃபு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 970 அரசு சொத்துகள், வக்ஃபு சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழ்நாட்டின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார்.

ஏழை இஸ்லாமியர்களை இந்த மசோதா பாதுகாக்கும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான தேவ கவுடா தெரிவித்தார்.

128 ஆதரவு ; 95 எதிர்ப்பு

தொடர்ந்து 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர்.

இதையும் படிங்க : வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் – தவெக தலைவர் விஜய்

இதன்மூலம் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேறியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு மசோதா சட்ட வடிவம் பெற உள்ளது.

First Published :

April 04, 2025 6:21 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Waqf Amendment Bill: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு



.

Previous Post

முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய பெண்கள் – திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! | nutrition staff attacked a student with a broom for asking for eggs

Next Post

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In