
Last Updated:
Delhi Election Results 2025 | டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்குமா அல்லது கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 60 புள்ளி 42 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நண்பகலுக்குள் எந்த கட்சி ஆட்சி என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்குமா அல்லது கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
February 08, 2025 6:37 AM IST
