Last Updated:
உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள ஆவணமாக பயன்படுத்த அரசியலமைப்பு அனுமதிக்கும் என தீர்மானம் வழங்கியது.
வாக்காளர்கள் ஆதார் அட்டையை வாக்களிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் Joymalya Bagchi ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாக்காளர் சரிபார்ப்பு பணிகளுக்காக பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்களை தாண்டி ஆதார் தேவையற்றது என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 கீழ் ஆதாரை வாக்காளர் அடையாள ஆவணமாக பயன்படுத்த அரசியலமைப்பு அனுமதிப்பதாக தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், ஆதாரை வாக்காளர் அடையாளத்தின் 12வது ஆவணமாக அறிவித்ததை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் நாட்டில் யார் வேண்டும் என்றாலும் எளிதில் ஆதார் அட்டை பெற முடியும் என வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வமாகவும் மற்றும் உரிய விதிகளைப் பின்பற்றியும் மேற்கொள்ளும் என நம்புவதாகவும் அதேநேரம் இந்த விவகாரத்தில் வழங்கப்படும் இறுதித் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் அனைத்து சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் தெரிவித்தனர்.
September 16, 2025 9:26 AM IST

