Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய மா.செக்கள்…! – பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுக கூட்டத்தில் அண்ணாமலையை வெளுத்து வாங்கிய மா.செக்கள்…! – பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்..!
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக காவல் தெய்வங்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது என்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா தொடராதா என்ற உச்ச கட்ட பரபரப்பு நிலவிய நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்கள் முன் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வாசிக்கிறேன். அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிகக்ள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக மீது கழக தெய்வங்கள் அண்ணா, ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது.

மதுரையில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எடப்பாடியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிபான சூழல் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை மாவட்ட செயலளர்கள்,கட்சி நிர்வாகிகள் கோடி தொண்டர்கள் எண்ணத்திற்கும் விருப்பம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுக தலைமையில் மற்ற கூட்டணியோடு இணைந்து சந்திக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து விமர்சனம் செய்ததை அதிமுக கண்டித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இன்று அககட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சில மாவட்ட செயலாளர்கள் அண்ணாமலையை ஒருமையில் பேசியதாகவும் தகவல் வருகிறது. நான் தான் அறிவாளி என்றும் மற்றவர்கள் முட்டாள் என்றும் நினைத்துக்கொள்கிறார் அண்ணாமலை என்று கூறியுள்ளனர். அண்ணாமலையை மாற்றினால் கூட்டணி பற்றி மீண்டும் பரிசீலிக்கலாம் என்று அதிமுக தலைமை முடிவுசெய்துள்ளதாக தகவல்.

Previous Post

இன்றைக்கும் இல்லை, என்றைக்கும் இல்லை பாஜக கூட்டணி..! – உருவாகிறதா புதிய கூட்டணி..?

Next Post

சூதானமா இருங்க.. பெரிய சூழ்ச்சி இது! திமுகவிற்கு போன ரெட் அலர்ட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சூதானமா இருங்க.. பெரிய சூழ்ச்சி இது! திமுகவிற்கு போன ரெட் அலர்ட்!

சூதானமா இருங்க.. பெரிய சூழ்ச்சி இது! திமுகவிற்கு போன ரெட் அலர்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In