திமுக கூட்டணி, பாஜக – அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்கிடையில் அதிமுகவுடன் ஒன்றுபட ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் வி.கே. சசிகலா,
“தமிழக மக்களின் நலன் காக்க, கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு.
ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.
