Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேசத்திற்கு எதிரான செயல்களில் நா.த.கட்சியினர் ஈடுபடுகின்றனர்: விளாசிய L.முருகன்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2024
in Default
0
தேசத்திற்கு எதிரான செயல்களில் நா.த.கட்சியினர் ஈடுபடுகின்றனர்: விளாசிய L.முருகன்.
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக்  கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர் இன்று தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் தலைமையில் காலையில் கேரள மாநிலத்திலும் பிற்பகல் தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளது. தேசிய தலைவர்கள் வரும்பொழுது அவர்களின் வசதிக்கேற்ப இரு மாநிலத்திற்கும் அருகாமையில் இருக்கக்கூடிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது இயல்பு. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது  மற்றும் அறிக்கை தயாரிப்புகள் உள்ளிட்டவை குறித்து தேசிய தலைவர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், கூட்டணியை பொறுத்தவரைத் தேசிய தலைமை முறையான அறிவிப்பு வெளியிடுவார்கள். எத்தனை கட்சிகள் கூட்டணியில் வருகிறார்கள், யார் யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என தேசிய தலைமை தெரிவிக்கும்.வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும்  தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் பாராளுமன்ற குழு அறிவிப்பார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளைச் செய்யத் தயாராக உள்ளோம் என்றார்

நடிகர் விஜய் கட்சி துவங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறவில்லை என்றும் கவனிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
எனவே என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் அவரது பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 2026 இல் பணிகள் வேகம் எடுக்கும் எனவும் இப்போது கவனிப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.2014 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்துக் கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வெற்றி பெற்றோம். எனவே, மூன்றாவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வர முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி  இருக்கிறது. 

நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை குறித்தான செய்தியாளர்கள் கேள்விக்கு, தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது என்.ஐ.ஏ ஆய்வு காட்டிக் கொடுத்துள்ளது. இதுவரை, தமிழக காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.ஐ.ஏ அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்த பிறகு, நாட்டிற்கு எதிராகச் செயல்கள் செய்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகு கைது செய்து இருக்கிறார்கள். என்.ஐ.ஏ என்பது தேசத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுபவர்கள்  மீது நடவடிக்கை எடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது. இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கியமான அமைப்பு தேசிய புலனாய்வு முகமை. நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேசத்தின் ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக உள்ளது. அந்த அமைப்பு அவர்களது வேலையைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது என்றார்

Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: புதுச்சேரி முழுவதும் கொந்தளிப்புடன் மக்கள் போராட்டம்..

Next Post

துப்பு கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்..! NIA அதிரடி அறிவிப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
துப்பு கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்..! NIA அதிரடி அறிவிப்பு..

துப்பு கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்..! NIA அதிரடி அறிவிப்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In