Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களின் எத்துப்பல் பிரச்னைக்கு தீர்வு – மாவட்ட நிர்வாகத்தின் புது முயற்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 18, 2025
in அரசியல் செய்திகள்
0
விருதுநகர் அரசுப்பள்ளி மாணவர்களின் எத்துப்பல் பிரச்னைக்கு தீர்வு – மாவட்ட நிர்வாகத்தின் புது முயற்சி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளின் உடல்நலனை கருத்தில்கொண்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. இந்த மருத்துவ முகாம்களின் மூலமாக, கண், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு சம்பந்தமான பொது பிரச்னைகளுக்கு ஆலோசனைகளும், தேவையான மருந்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்திலேயே முதல் முயற்சியாக விருதுநகர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பல் சம்பந்தப்பட்ட நுணுக்கமான பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மலரும் புன்னகை

மலரும் புன்னகை

ஆட்சியர் ஜெயசீலன் சொல்வது என்ன?

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் பேசினோம். “என்னுடைய, பள்ளி ஆய்வின் போது ஒரு சில மாணவர்கள் சீரற்ற பல்வரிசையுடன் கூச்ச சுபாவத்துடன் பேசுவதை, சிரிப்பதை கவனித்தேன். உதட்டுபிளவு, இதய நோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளையும் சரி செய்வதற்கு காப்பீட்டு திட்டமும் அரசு மருத்துவமனைகளில் வசதியும் இருக்கிறது. ஆனால் எத்து பல், தெத்துப்பல் பிரச்னைகளை சரி செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால், இது குறித்து பல் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து இதை செயல்படுத்துவதற்கு திட்டம் வகுத்தோம்.

இது, மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எத்துப்பல்லால், பல் சொத்தை, பல் வளர்ச்சியின்மை, ஈறு பலவீனமடைதல், வாய் அழற்சி, சீரற்ற பல் வரிசை, தாடை வீக்கம், மஞ்சள் படிதல், அழகு சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது.

அதேசமயம் “எத்துப்பல்’, சிலருக்கு தன்னம்பிக்கையை குறைக்கக்கூடிய பலவீனமாகவும் உணர்கின்றனர். அதேபோல, மாறுகண் பிரச்னையும் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு, மாணவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில், பொதுநோய் சிகிச்சைகளுக்கு மட்டுமே அரசு நிதி ஒதுக்கீட்டின்பேரில் இலவசமாக சிகிச்சைகள் வழங்கிட முடியும்.



.

Previous Post

‘தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு OUT OF CONTROL! ஒரு கை பார்க்க ரெடி!’ அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

Next Post

இடம் பிடித்த பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இடம் பிடித்த பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம்!

இடம் பிடித்த பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In