Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பேர் கைது..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 26, 2024
in அரசியல் செய்திகள்
1
போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல்; வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 6 பேர் கைது..
64
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் மாவட்டத்தில், வங்கி வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடி செய்த வங்கி முன்னாள் மேலாளர் உள்பட 3 பேருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ‘தாய்கோ’ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கிளையில் கடந்த 2008ம் ஆண்டு மேலாளராகப் பணிபுரிந்தவர் சாத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர் பதவியிலிருந்த காலகட்டத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாய்கோ வங்கி கிளையில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை விசாரணை நடத்தினர். காவல்துறையின் விசாரணையில், வங்கி கிளை வாடிக்கையாளர்கள்‌ பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து ரூ.46 லட்சத்து 5 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த கையாடலில், வங்கி கணக்கர் குலாம் அகமத், உதவியாளர் சாரதா, கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், ராஜபாளையம் அன்னை இந்திரா காந்தி நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி சுந்தரி, ராஜபாளையம் அரசுப் போக்குவரத்து கிளை பணியாளர் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், முத்துராமன், முரளிதரன், முத்துசாமி மாரியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராம்குமார், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சரவணன், வத்திராயிருப்பைச் சேர்ந்த கற்பகவள்ளி உள்பட 14 பேருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 
 
 

அதைத்தொடர்ந்து, வங்கி பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காக வங்கி மேலாளர் ராமச்சந்திரன்‌ உள்பட 14 பேரின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து வந்தார். பல்வேறு அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 246 ஆவணங்கள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கிளை மேலாளர் ராமச்சந்திரன், குலாம் அகமத், ஜோதி சுந்தரி, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோர் குற்றவாளிகள் எனக் நீதிமன்றம் தீர்மானம் செய்தது. இந்தநிலையில் இந்த வழக்குத் தீர்ப்புக்காக நேற்று (அக்டோபர் 25) எடுத்துக்கொள்ளப்பட்டதில், முன்னாள் வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, தலைமை ஆசிரியை ஜோதி சுந்தரி ஆகிய மூன்று பேருக்கும் தலா 7 வருடக் கடுங்காவல் தண்டனையும், தலா 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 
காவல்
 
காவல்
 

தொடர்ந்து, முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது‌. இந்த வழக்கிலிருந்து, வங்கி உதவியாளர் சாரதா, முத்துராமன், மாரியம்மாள், கற்பகவள்ளி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆறுமுகம், சரவணன், முருகானந்தம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பள்ளிகளுக்கு விடுமுறை.. மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்.. டாப் 10 செய்திகள்!

Next Post

பேருந்து சேவையை தொடங்கியது Uber..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேருந்து சேவையை தொடங்கியது Uber..

பேருந்து சேவையை தொடங்கியது Uber..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த வழக்கை புலனாய்வு செய்து முறையான கைது நடவடிக்கை மேற்கொண்டு திறம்பட வழக்கு நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு பொதுமக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவிக்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In