Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஏசி பெட்டியில் ஏறினால் தண்டனை.. மீறினால் லட்சங்களில் அபராதம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 1, 2024
in அரசியல் செய்திகள்
1
ஏசி பெட்டியில் ஏறினால் தண்டனை.. மீறினால் லட்சங்களில் அபராதம்..
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோடை காலத்தில் முன்பதிவு செய்யாமலேயே ஏசி ரயில் பெட்டிகளில் ஏறிய பயணிகளுக்கு, அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனையை ரயில்வே வழங்கி வருகிறது.

கோடை காலத்தில் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பது மிகவும் சிரமமானது. குறிப்பாக, ரயில்களில் கூட்டம் அதிகளவு குவியும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணித்தால் அவ்வளவுதான். குளிக்காமல் அந்த பெட்டிகளில் ஏறினால், இறங்கும்போது வியர்வையிலேயே குளித்துவிட்டு வெளியேறும் அளவுக்கு வெப்பத்தின் தாக்கமும், கூட்டத்தால் ஏற்படும் புழுக்கமும் இருக்கும்.

News18

இந்நிலையில், ரயில்களில் சில பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்திருந்தாலும், முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் ஏறி விடுகின்றனர். இதனால், பல்வேறு இடங்களில் சண்டை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற பயணிகளிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணச்சீட்டு இல்லாமல், முறையற்ற பயணம் செய்ததாக பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.1.54 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூறியுள்ள மத்திய கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சரஸ்வதி, ”டிக்கெட் இல்லாமல் மற்றும் முறைகேடாக பயணிக்கும் பயணிகளை கைது செய்ய விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு ரயில்வேயில் இயங்கும் மற்றும் கடந்து செல்லும் ரயில்களில் மொத்தம் 268 ஏசி பெட்டிகளில் சோதனை செய்யப்பட்டன. இதில் அனுமதியின்றி பயணம் செய்த 521 பயணிகளுக்கு ரூ.3.51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.”

சிறப்பு நடவடிக்கைகளில் டானாபூர், சோன்பூர், சமஸ்திபூர், பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மற்றும் தன்பாத் ஆகிய அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் டிடிஆர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும், இதில், 21,270 பயணிகள் டிக்கெட் இல்லாமலும், சரியான டிக்கெட் இல்லாமலும் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.1.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

.

Previous Post

உலக அளவில் உணவுப் பொருட்களை வீணாக்குவதில் இந்தியர்களுக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் தெரியுமா?

Next Post

குளத்தில் வீசப்பட்ட EVM: வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குளத்தில் வீசப்பட்ட EVM: வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை…

குளத்தில் வீசப்பட்ட EVM: வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய இயலவில்லை மன்னிக்கவும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In