தன்னுடைய போராட்டம் தொடரும் என்றும், விளையாட்டு வீரர்கள் யாரும் தான் கடந்து வந்த சங்கடங்களை அனுபவிக்கக் கூடாது என்றும் பேசியிருந்தார் வினேஷ் போகத்.
ஹரியானாவின் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார் வினேஷ் போகத். முன்னாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா கர்ஹி சம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நேற்று ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார். அதைத்தொடர்ந்து நேற்றிரவில் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுவதைக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அந்த நிகழ்ச்சியில், ” வீதிகளில் நாங்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, பாஜக-வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எங்களுடன் நின்று எங்களின் கண்ணீரையும், வலிகளையும் புரிந்துகொண்டன.” எனப் பேசினார் வினேஷ் போகத்.
ஹரியானாவில் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8ல் முடிவுகள் வெளியாகும்.

