Last Updated:
கடல் மட்டத்தில் இருந்து இந்த கிராமம் சுமார் 1100 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம்ம் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். எக்ஸ் தளத்தில் மட்டும் அவரை 11.5 மில்லின்பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர் வெளியிடும் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி விடுகின்றன.
மிகவும் முக்கியமான தகவல்களையும், ஆச்சரியமான விஷயங்களையும் பகிர்வதை ஆனந்த் மகிந்திரா வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேகாலயாவில் உள்ள ஒரு கிராமம் குறித்து பதிவிட்டுள்ளார்.
மகிந்திரா தனது பதிவில் மேகங்களை தலைக்கு மேல் வைத்திருக்கும் கிராம் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இதுபோன்ற அற்புதமான கிராமங்கள் குறைவான அளவே அறியப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
Nongjrong
A village in the East Khasi Hills of Meghalaya, which due to its elevation, literally has its head in the cloudsThe world knows little of these exceptional spots in India…
And neither do many of us!#SundayWanderer
— anand mahindra (@anandmahindra) September 21, 2025
அவர் குறிப்பிட்டுள்ள காசி என்ற கிராம் மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளில் (East Khasi Hills) உள்ள மாகின்ரூ பகுதியில் (Mawkynrew Tehsil) அமைந்துள்ளது.
September 30, 2025 7:36 PM IST

