Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தான் ராணுவம் விடுத்த முதல் அழைப்பு.. சண்டை நிறுத்தப்பட்டது எப்படி? – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 16, 2025
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தான் ராணுவம் விடுத்த முதல் அழைப்பு.. சண்டை நிறுத்தப்பட்டது எப்படி? – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2025 6:16 PM IST

பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியானது.

News18News18
News18

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்திருக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது. இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய நிலையில், S-400 மற்றும் ஆகாஷ் போன்ற கவசமுறைகளால் இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், இந்த தாக்குதல் மேலும் தீவிரமடைந்தால், பாகிஸ்தானில் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இருநாடுகளும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் அறிவார்ந்த செயலுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய இராணுவ ஜெனரலை அழைத்தார். அப்போது இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் தரைவழி, வான்வழி, கடல் வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இருநாடுகள் இடையேயான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை இருதரப்பிலும் உடனே செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்களும் வருகிற மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று அறிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

பாகிஸ்தான் ராணுவம் விடுத்த முதல் அழைப்பு.. சண்டை நிறுத்தப்பட்டது எப்படி? – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!



.

Previous Post

‘டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்?’ அதிமுக ஐ.டி.விங் ட்வீட்!

Next Post

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In