அந்த அகந்தையில் சினிமாவில் பேசுவதைப் போல் பேசுகிறார். “நான் பிரசாரத்திற்கு வந்தால் கண்டிஷன்கள் போடுகின்றனர். பிரதமரோ அமித்ஷாவோ வந்தால் இப்படி கண்டிஷன் போடுவார்களா? சி.எம் சாரைக் கேட்டுப்பாருங்கள்’ என்கிறார்.
விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதல்வரோ வந்தால் அவர்களுக்கான ப்ரோட்டாகால் என்ன? விஜய்யின் ப்ரோட்டோகால் என்ன? என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்.
கண்ணியக்குறைவான வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும். யாரோ எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் விஜய் குறிப்பிடுவதைப் போல அவரைத் தவிர அரசியல் கட்சி நடத்தும் யாருக்கும் பயம் இல்லை. தலைவா படப்பிடிப்புக்காக கொடநாட்டில் 3 நாட்கள் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” என்றார்.
