நீண்டகாலமாக கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு முன், எல்.கே. சுதீஷ் இளைஞரணி செயலாளராக இருந்தார். தற்போது, விஜய பிரபாகரனுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரேமலதா வகித்து வந்த பொருளாளர் பதவி, எல்.கே.சுதீஷுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக மோகன்ராஜ், துணைச் செயலாளர்களாக பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
