Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜயகாந்த் நல்லாயிருக்காரு.. எல்லா உறுப்புகளும் வொர்க் ஆகுது.. வதந்தி பரப்பாதீர்.. நடிகர் நாசர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
விஜயகாந்த் நல்லாயிருக்காரு.. எல்லா உறுப்புகளும் வொர்க் ஆகுது.. வதந்தி பரப்பாதீர்.. நடிகர் நாசர்
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை மியாட் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பெப்சி யூனியர் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகிய உடல்நல பிரச்சினை காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Vijayakanths sense organs working fine, says Actor Nassar

மேலும் அவருக்கு நுரையீரலுக்கு சிகிச்சை அளிக்க 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் மனவேதனை அடைந்தனர். விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரேமலதா வீடியோவில் தோன்றி, கேப்டன் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார், நம்மை எல்லாம் சந்திப்பார். அது வரை எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். மருத்துவமனை அறிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

Vijayakanths sense organs working fine, says Actor Nassar

நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் விஜயகாந்த் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த செய்திகள் எல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை சந்தித்தோம். அவரும் விஜயகாந்த் நன்றாக தெரிவித்தார்.

தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார். இவ்வாறு நாசர் தெரிவித்தார். விஜயகாந்துக்கு சுவாச பிரச்சினைகள் இருப்பதால் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களில் அவருடைய சுவாச பிரச்சினைகள் சரியாகி குணமடைய வேண்டும் என மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

அவருக்கு ஏற்கெனவே இருந்த சிறுநீரக பிரச்சினையும் குணமாகிவிட்டதாக தெரிகிறது. இந்த சளி பிரச்சினை சரியாகிவிட்டால் வரு் 2024 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரம் அட்டகாசமாக இருக்கும். நிச்சயம் அவர் வந்துவிட்டால் இத்தனை ஆண்டுகளாக தேர்தலில் விட்டதை தேமுதிக அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பிடித்துவிடும் என்பது தொண்டர்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது உடல்நலம் பெற அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Previous Post

மதுரை ED அதிகாரி லஞ்ச விவகாரம் – வழக்கு சிபிஐக்கு மாறுகிறதா?

Next Post

மிக்ஜம் புயல்.. டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களில் லீவு தெரியுமா.?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மிக்ஜம் புயல்.. டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களில் லீவு தெரியுமா.?

மிக்ஜம் புயல்.. டிச.4ம் தேதி பள்ளி, கல்லூரிகள் எந்தெந்த மாவட்டங்களில் லீவு தெரியுமா.?

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    ஏன் நடிகர் நாசர் தாங்கள் சொல்கிறீர்கள் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் விரைவில் வீடு திரும்புவார் எல்லா புலன்களூம் வேலை செய்கின்றன என்று சந்தோஷம் அப்படியே இருக்கட்டும் நல்லதே நடக்கட்டும். இதை மியாட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சொல்ல வேண்டியது தானே. தலைமை மருத்துவர் ஏன் மௌனம் சாதிக்கிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In