Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் : திடீர் ரெய்டு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in Default
1
அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர் : திடீர் ரெய்டு..
51
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது.

அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி நேற்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

Why Ex Minister Vijayabaskar was absent in many AIADMK meetings amid the Enforcement directorate raids

அதன்படி,
1‌ ) வட சென்னை – ஆர்.மனோ

2 ) தென் சென்னை – டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்

3 ) காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்

4 ) அரக்கோணம் – A.L.விஜயன்

5 ) கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்

6 ) ஆரணி – கஜேந்திரன்

7 ) விழுப்புரம் (தனி) – J.பாக்யராஜ்

8 ) சேலம் – P.விக்னேஷ்

10 ) ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்

11 ) கரூர் – தங்கவேல்

12 ) சிதம்பரம் (தனி) – M.சந்திரகாசன்

13 ) நாகை – சுர்ஜித் சங்கர்

14 ) மதுரை – டாக்டர் P. சரவணன்

15 ) தேனி – V.T.நாராயணசாமி

16 ) ராமநாதபுரம் – பா. ஜெயபொருமாள்

இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கூட்டணி முறி; அதிமுக – பாஜக கூட்டணி கண்டிப்பாக நடக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியினரை குறி வைத்து பாஜக சார்பாக அமலாக்க துறையினர் மூலம் மிரட்டி வருகிறது என தொடரும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில்தான் விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்கி உள்ளார்.

ஒதுங்கி இருந்த விஜயபாஸ்கர்: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது. விஜயபாஸ்கர் அதிமுக கூட்டணி தொடர்பான மீட்டிங் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல் கூட்டணி அறிவிப்பு தொடர்பான மீட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. விஜயபாஸ்கர் தொடர்ந்து ஒதுங்கியே இருந்த நிலையில்தான் அவர் இப்போது ரெய்டில் சிக்கி உள்ளார்.

ரெய்டு: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு என்று 2022-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அளித்த தகவலின் பேரில் தற்போது, அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

Previous Post

அதிமுக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. யார் இந்த சிம்லா முத்து சோழன்.?

Next Post

கடும் அதிருப்தியில் பாமக, தமாகா, ஓபிஎஸ்..! பாஜகவின் பிடிவாதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடும் அதிருப்தியில் பாமக, தமாகா, ஓபிஎஸ்..! பாஜகவின் பிடிவாதம்

கடும் அதிருப்தியில் பாமக, தமாகா, ஓபிஎஸ்..! பாஜகவின் பிடிவாதம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மருத்துவத் துறையில் அதிக ஊழல் செய்தவர் தான் இந்த விஜயபாஸ்கர் இவருக்கு துணையாக இருந்த அப்போதைய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் வீட்டிலும் இதே போன்று சோதனை நடத்தி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும் ராதா கிருஷ்ணன் இப்பொழுது சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆணையர் ஆக பதவி வகிக்கிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In