Chennai oi-Hemavandhana
Published: Wednesday, June 28, 2023, 9:41 [IST]
சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் மீண்டும் தேமுதிக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்திருக்கிறார். எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. இதுவரை தேமுதிக கூட்டணி குறித்த தகவல் முடிவாகவில்லை… யாருடன் கூட்டணி என்பது குறித்து உறுதியான தகவலும் வரவில்லை.. ஆனால், தொகுதிகளில் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.. கூட்டணி: அத்துடன் விஜயபிரபாகரன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகவே சென்று, மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாராம்.. இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: “கட்சிக்குள் தொய்வை சரிப்படுத்தும் வேலையில் விஜயபிரபாகரன் மும்முரமாகி இருக்கிறார்.. விஜய பிரபாகரனின் பக்குவமும், முதிர்ச்சி அரசியலும் கூடியுள்ளதும் கட்சிக்கு தெம்பை தந்து கொண்டிருக்கிறது.. “அடுத்த அவதாரம் ரெடி” என்ற என்பதாகவே நாங்கள் அவரை பார்க்கிறோம்.. ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. விரைவில் மா.செ. கூட்டத்தை நடத்த போகிறோம்.. அப்போதுதான், கட்சி மேலிடம் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபடுவார்கள்” என்றனர். யாருடன் கூட்டணி: எனினும், பாஜகவை இப்போதுவரை விட்டுக்கொடுக்காமலும், அதேசமயம், திமுகவை கடுமையாக தாக்கியும், தேமுதிக மேலிடத்தின், சமீபகால பேச்சுக்களும், பேட்டிகள் அமைந்துவருவதும் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், விஜயபிரபாகரனின் பேச்சு ஒன்று இணையத்தில் ஷேர்ஆகி வருகிறது.. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தேமுதிக தொழிற்சங்க 18ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் விஜயபிரபாகரன் பேசும்போது, “ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று, 18 வருடங்களுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் சொன்னவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்… உடனே, அது எப்படி வரும்? என்று எல்லாரு கேட்டார்கள்… ஆனால், இன்றைக்கு எல்லாமே சாத்தியமாகி உள்ளது.. கேப்டன் விஜயகாந்த்: ஆன்லைனில் பொருட்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. பஞ்சாப், ஆந்திரா, டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.. இதைதானே கேப்டன் அன்னைக்கே சொன்னாரு.. டெல்லியில் 20 வருடங்களுக்கு முன்பே மெட்ரோ ரயில் வந்துள்ளது. சென்னையில் இப்போதுதான் அதுக்கு வேலை நடக்கிறது.. தொலைநோக்கு பார்வை உடையவர் கேப்டன்.. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளவர்கள் அனைவரும், தேமுதிகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை செய்ய வேண்டும்.. மறுபடியும் விருகம்பாக்கம் தொகுதியில், தேமுதிக வெற்றிப்பெற வேண்டும்… முரசு சப்தம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.. அதற்கு கேப்டனின் தொண்டர்கள்தான் உதவ வேண்டும்” என்று விஜயபிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
ration goods in search of houses dmdk vijayakanth said, will it happen soon
Story first published: Wednesday, June 28, 2023, 9:41 [IST]

