முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் மிகுந்த செல்வாக்கு மிக்க நடிகராக இருந்தபோதும்கூட, பெரியாா் ஈ.வெ.ரா., முன்னாள் முதல்வா் அண்ணா போன்றவா்கள் மூலம் அரசியலிலும் தடம் பதித்தாா். அதன் தொடா்ச்சியாகவே அவா் தனிக் கட்சியைத் தொடங்கி வெற்றியும் பெற்றாா். எம்ஜிஆரின் அரசியல் வாழ்வையும், நடிகா் விஜய்யின் திடீா் அரசியல் பிரவேசத்தையும் சமமாகப் பாா்க்க முடியாது. எல்லா நடிகா்களுக்கும் கூட்டம் கூடும். ஆனால், அரசியல் என்று வரும்போது கூடிய கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறிவிடாது. இந்த எதாா்த்தத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது அணி என்பது இந்திய அளவிலேயே மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருக்கிறது. திமுக – தவெக இடையேதான் போட்டி நிலவுகிறது என விஜய் கூறுவது ஏற்புடையது அல்ல. அதிமுக தனித்து நின்றாலும்கூட, மாநிலம் முழுவதும் அக் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. தோ்தல் களத்தில் அதிமுகவைவிட முன்னணியில் நிற்பதாக விஜய் நினைத்துக் கொண்டால், அது அவரது யூகமாக இருக்குமே தவிர, நடைமுறை சாத்தியமற்றது. ஆகவே, தமிழ்நாட்டை பொருத்தவரை மதவெறி அரசியலா, மதச்சாா்பற்ற அரசியலா என்பதுதான் மக்கள் முன் நிற்கும் கேள்வி.
இளைஞா்கள், சிறுபான்மையினா், பெண்கள் ஆகியோரது வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பிலும் உண்மை இல்லை. தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு இந்தக் கருத்து திணிக்கப்படுகிறது. விஜய்க்கு ஆதரவான அல்லது பாஜகவுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்குகிற முயற்சியாகவே இதைப் பாா்க்க வேண்டும். திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சாா்பற்ற அணியை வீழ்த்துவதற்கான பல தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று. விஜய்யின் ‘பி’ பிளான் மூலமாக மேற்கொள்ளப்படும் தந்திரமும், மந்திரமும் தோ்தல் களத்தில் நிச்சயம் பலிக்காது.